Home
தென்மராட்சிக் கல்வி வலயத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்திடும் எமது பாடசாலையில் அடுத்த வரும் வருடம் முதல் க.பொ.த உயர்தரப் பிரிவில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எமது பாடசாலை இதுவரை காலமும் கலை, வரத்தக வகுப்புக்களைக் கொண்ட 1 ‘C’ தரப் பாடசாலையாக இயங்கி வந்தது. பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் , பழைய மாணவர் சங்கமும் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக 05.05.2012 ந் திகதியிலிருந்து மாகாணக் கல்வி அமைச்சினால் 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதுடன், க.பொ.த உயர்தர வகுப்புக்களில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத் தர உயர்வு பாடசாலை வளர்ச்சியில் ஓர் முக்கிய மைல்கல்லாகும்.
எமது பாடசாலை தந்திரோபாயங்களினூடான தனது பணியினால் அதன் இலக்கினையும் , நோக்கினையும் அடைந்து வருவது கண்டு பாடசாலைச் சமூகம் மகிழ்வடைகின்றது.
